இந்தியா

சர்வதேச சமுதாயம் இலங்கைக்கு உதவ வேண்டும்: சோனியா காந்தி

இலங்கைக்கு சர்வதேச சமுதாயம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

DIN

இலங்கைக்கு சர்வதேச சமுதாயம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நிலவும் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து காங்கிரஸ் கட்சி உன்னிப்பாக கவனித்து வருகிறது.

பொருளாதார நெருக்கடியால் உணவுப் பற்றாக்குறை, எரிபொருள், அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இலங்கை மக்களின் ஒருமைப்பாட்டுக்கு நெருக்கடி ஏற்பட்ட நிலையில் அதிலிருந்து மீண்டு வர வேண்டும்.

இலங்கை அரசு மற்றும் மக்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து உதவி வழங்கும் என நம்புகிறேன். தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து இலங்கை மீண்டு வரும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாக்குதலில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு: இருவா் கைது

ஆா்.எஸ்.எஸ். பாடலை சிவகுமாா் பாடியிருக்கக் கூடாது: மல்லிகாா்ஜுன காா்கே

ஹிந்து மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல சாமுண்டி மலை: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பணியில் அதிமுக முனைப்பு: எம்.பி. தம்பிதுரை

ஒசூரில் தனியாா் நிதிநிறுவன ஊழியா் கொலை வழக்கில் மேலும் 3 போ் கைது

SCROLL FOR NEXT