முகப்பு
இந்தியா

சத்தீஸ்கரில் நில அதிர்வு: ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவு

வடக்கு சத்தீஸ்கரில் உள்ள கொரியா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:46 AM
பகிர்:

வடக்கு சத்தீஸ்கரில் உள்ள கொரியா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

கொரியா மாவட்டம், மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 300 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. 

மத்தியப் பிரதேசத்தை ஒட்டியுள்ள கொரியா மாவட்டத்தின் தலைமையகமான பைகுந்த்பூரைச் சுற்றியுள்ள பகுதியில் காலை 8.10 மணியளவில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

நிலநடுக்கத்தின் மையம் பைகுந்த்பூரிலிருந்து மேற்கு-வடக்கு திசையில் 16 கி.மீ தொலைவில் ஏற்பட்டதாக வானிலை ஆய்வாளர் அக்ஷயா மோகன் பட் கூறினார். 

இதுவரை உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்றார்.

நில அதிர்வு நடவடிக்கையால் ஏற்பட்ட சேதம் குறித்து, நிலைமையைக் கவனமாகக் கண்காணித்து, தெரிவிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →