கோப்புப் படம் 
இந்தியா

10-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் கரோனா, காலநிலை சேர்க்கப்படும்: கல்வி அமைச்சர்

நடப்பு 2022-23 கல்வியாண்டு முதல் 10-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் கரோனா மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றத்தைச் சேர்க்க ஒடிசா அரசு முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் எஸ்.ஆர்.தாஸ் தெரிவித்துள்ளார். 

PTI

நடப்பு 2022-23 கல்வியாண்டு முதல் 10-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் கரோனா மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றத்தைச் சேர்க்க ஒடிசா அரசு முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் எஸ்.ஆர்.தாஸ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கல்வி அமைச்சர் தாஸ் கூறுகையில், 

மாநிலம் ஏற்கனவே மூன்று கரோனா அலைகளை அனுபவித்து, நான்காவது அலைக்குத் தயாராகி வருவதால் எதிர்காலத்தில் இளைய தலைமுறையை தயார்படுத்துவதற்காக தொற்றுநோய் பற்றிய ஆய்வுகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்றார். 

இதேபோன்று, இயற்கை சீற்றங்களால் மாநிலம் அடிக்கடி பாதிக்கப்படுவதால், பருவநிலை மாற்றத்தால் மனித சமுதாயத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். 

இது உலகளாவிய அச்சுறுத்தல் மற்றும் மாணவர்கள் இதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கரோனா மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை நடப்பு கல்வியாண்டின் இரண்டாம் பருவ பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். 

தொற்றுநோய் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளில் 75 சதவீத பாடத்திட்டங்கள் மட்டுமே கற்பிக்கப்பட்டன, ஆனால் இந்தாண்டு 100 சதவீதம் கற்பிக்கப்பட்டு, அதற்கேற்ப  பொதுத்தேர்வுகளில் கேள்விகள் கேட்கப்படும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT