பூரம் விழாவின் கதாநாயகன் பாரமேகாவு ஸ்ரீ பத்மநாபன் யானை மரணம்
யானைகளால் கோலாகலமாக கொண்டாடப்படும் கேரளத்தின் பூரம் விழாவின் நாயகனாக திகழ்ந்த பாரமேகாவு ஸ்ரீ பத்மநாபன் யானை செவ்வாய்க்கிழமை மரணம் அடைந்தது.
சென்னை: யானைகளால் கோலாகலமாக கொண்டாடப்படும் கேரளத்தின் பூரம் விழாவின் நாயகனாக திகழ்ந்த பாரமேகாவு ஸ்ரீ பத்மநாபன் யானை செவ்வாய்க்கிழமை மரணம் அடைந்தது.
திரிசூரில் பிரசித்தி பெற்ற பாரமேகாவு அம்மனுடைய விக்கிரஹம் தாங்கிய திடம்பை கடந்த 15 ஆண்டுகளாக தலையின் மேற்பகுதியில் சுமந்து சேவையாற்றிய வந்தது பாரமேகாவு ஸ்ரீ பத்மநாபன் என்ற யானை.
இதையும் படிக்க.. சகோதரன் உடலுடன் சாலையோரம் காத்திருந்த சிறுவன்: விசாரணைக்கு உத்தரவு
பிகாரில் இருந்து கேரளத்துக்கு வந்த யானை கூட்டத்தில் ஒன்று ஸ்ரீ பத்மநாபன் யானையை 2005 -ல் பாரமேகாவு தேவஸ்தானம் வாங்கியது. கடந்த ஒரு வாரகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது.
பொதுமக்களின் தரிசனத்திற்காக திரிசூர் பாடுக்காடு பகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கோடநாடு வனத்தில் புதன்கிழமை இறுதி சடங்கு நடைபெறுகிறது.