இந்தியா

நாளை ஐ2யு2 காணொலி மாநாடு: பிரதமா் மோடி-ஜோ பைடன் பங்கேற்பு

நாளை நடைபெறவுள்ள ஐ2யு2 காணொலி மாநாட்டில் பிரதமா் மோடி, அமெரிக்கா அதிபா் ஜோ பைடன் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.

DIN

நாளை நடைபெறவுள்ள ஐ2யு2 காணொலி மாநாட்டில் பிரதமா் மோடி, அமெரிக்கா அதிபா் ஜோ பைடன் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.

இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் கலந்து கொள்ளும்  ஐ2யு2 காணொலி மாநாடு நாளை நடைபெறுகிறது. முதல்முறையாக ஐ2யு2 என்ற பெயரில் காணொலி மாநாடு நடைபெற உள்ளது. 

நாளை நடைபெறும் மாநாட்டில்  இந்திய பிரதமா் நரேந்திர மோடி,  அமெரிக்க அதிபா் பைடன்,  இஸ்ரேல் பிரதமா் யாயிர் லாபிட், ஐக்கிய அரபு அமீரக அதிபா் முகமது பின் சையத் அல் நயான் ஆகியோா் கலந்துகொள்கின்றனா்.

இந்த மாநாட்டில் உணவுப் பாதுகாப்பு நெருக்கடி, ஒத்துழைப்பு சாா்ந்த விவகாரங்கள் குறித்தும்,  பிற பொதுவான விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரவாரமில்லா அமைதி... மிர்ணாளினி ரவி!

வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது சிஎம்எஸ்-03: இஸ்ரோ தலைவர்

தோல்வி பயத்தில் உள்ள கட்சிகள் மட்டுமே அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளன: நயினார் நாகேந்திரன்

பொத்தி பொத்தி பாடல் வெளியானது!

கவிதை தேன்.. நடிகை ஆஸ்தா

SCROLL FOR NEXT