கேரளத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு: நாட்டில் முதல் தொற்று உறுதியானது
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளத்துக்கு வந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம் நாட்டில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளத்துக்கு வந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம் நாட்டில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வியாழக்கிழமை கேரளம் வந்த நபருக்கு குரங்கு அம்மை நோய்த் தொற்று அறிகுறிகள் இருந்ததையடுத்து அவரது மாதிரிகள் புணேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதையும் படிக்க | தமிழ்நாட்டில் புதிதாக 2,283 பேருக்கு கரோனா தொற்று
இந்நிலையில் பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என 11 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள வீணா ஜார்ஜ் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | குரங்கு அம்மை: மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்!
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர் நலமுடன் உள்ளதாகவும் மாநில அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் குரங்கு அம்மையால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதன் மூலம் நாட்டில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.