திருவனந்தபுரம்: வெளிநாட்டிலிருந்து கேரளத்துக்கு வந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் இருந்ததால், அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இது பற்றி கூறுகையில், கேரளத்தில் குரங்கு அம்மை நோய்த் தொற்றுடன் காணப்பட்டவரின் மாதிரிகள் புணேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் பரிசோதனை முடிவுகள் இன்று மாலை தெரிய வரும். வெளிநாட்டிலிருந்து கேரளத்துக்குத் திரும்பிய நபருடன் நெருங்கிப் பழகியவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட நிலையில், இவருக்கும் அறிகுறிகள் தெரிய வந்ததையடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கவலைப்படும் வகையில் தற்போது நிலைமை மோசமடையவில்லை. மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்று வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.