இந்தியா

தில்லி: சேமிப்புக் கிடங்கின் சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி

தில்லியில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் சேமிப்புக் கிடங்கின் சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகியுள்ளனர். 

DIN

தில்லியில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் சேமிப்புக் கிடங்கின் சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம் தில்லியின் புறநகர் பகுதியான அலிப்பூரில் நிகழ்ந்துள்ளது. கட்டுமானப் பணிகள் நிறைவு பெறாத கிடங்கின் சுவர் இடிந்ததில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

தீயணைப்புத் துறையினரால் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய 10 பேரில் இதுவரை 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து பேசிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்ததாக தெரிவித்தனர். 

இடிபாடுகளுக்கு உள்ளான இந்த சேமிப்புக் கிடங்கு 5000 சதுர அடியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.20 கோடி ஒதுக்கீடு: கேரள அரசு

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

SCROLL FOR NEXT