மார்கரெட் ஆல்வா வேட்புமனுத் தாக்கல் 
இந்தியா

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: மார்கரெட் ஆல்வா வேட்புமனுத் தாக்கல்

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மார்கரெட் ஆல்வா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

DIN

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மார்கரெட் ஆல்வா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜகதீப் தன்கர் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில், எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநா் மாா்கரெட் ஆல்வா இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்த நிகழ்வின்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக எம்.பி. திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனையின் சஞ்சய் ரெளத் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூலை 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், ஜூலை 20-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். ஜூலை 22-ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாளாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT