கிரிப்டோகரன்சி 
இந்தியா

கிரிப்டோகரன்சியை தடை செய்ய ஆர்பிஐ வலியுறுத்தல்

இந்தியாவில் கிரிப்டோகரன்சியை தடை செய்ய வேண்டும் என ஆர்பிஐ வலியுறுத்தியுள்ளது.

DIN

இந்தியாவில் கிரிப்டோகரன்சியை தடை செய்ய வேண்டும் என ஆர்பிஐ வலியுறுத்தியுள்ளது.

உலகளவில் கடந்த சில மாதங்களாக கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், முதலீடு செய்யப்பட்ட நாணயங்கள் மீதான மதிப்புகள் கடுமையான சந்தை மதிப்பை இழந்து வருகின்றன. 

கிரிப்டோவின் அடையாளமான பிட்காயினின் ஒரு பங்கின் விலை சில மாதங்களில் ரூ.40 லட்சத்தில் இருந்து தற்போது ரூ.17 லட்சமாக குறைந்துள்ளது. இதேபோல பல நாணயங்களும் பெரிய சரிவைச் சந்தித்து வருகின்றன.

இதன் காரணமாக, இந்தியாவில் முதலீடு செய்தவர்களில் பலரும் கடுமையான இழப்பைச் சந்தித்துள்ளனர். 

இந்நிலையில், நேற்று(திங்கள்கிழமை) கிரிப்டோகரன்சி குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டபோது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  “ இந்தியாவில் கிரிப்டோகரன்சியை தடை செய்ய வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி(ஆர்பிஐ) தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், உலக நாடுகள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இது சாத்தியம். இந்தியாவில் மட்டும் தடை செய்வதால் எந்தப் பயனும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நாட்டின் நிதி நிலைத்தன்மையில் கிரிப்டோகரன்சி சீர்குலைவை ஏற்படுத்தும் என ஆர்பிஐ கவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிரியா தலைநகரில்... இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதலில் 6 வீரர்கள் பலி!

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 17 மாவட்டங்களில் மழை!

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

இனிய தொடக்கம்... காவ்யா அறிவுமணி!

SCROLL FOR NEXT