கோப்புப் படம் 
இந்தியா

கர்நாடகத்தில் சாக்லேட் சாப்பிட்ட 6 வயது சிறுமி மூச்சுத்திணறி பலி

கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டம் பைந்தூர் அருகே ஆறு வயது சிறுமி சாக்லேட் விழுங்கியதால் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

IANS

கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டம் பைந்தூர் அருகே ஆறு வயது சிறுமி சாக்லேட் விழுங்கியதால் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உயிரிழந்த சிறுமி சமன்வி என அடையாளம் காணப்பட்டுள்ளார். விவேகானந்தா ஆங்கிலவழி பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்துவந்தார். 

இன்று காலை சிறுமி சமன்வி பள்ளிக்குச் செல்ல விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவளைப் பள்ளிக்குச் செல்ல வற்புறுத்தினர். சிறுமியின் தாய் சுப்ரிதா புஜாரி அவளை சமாதானப்படுத்த சாக்லேட் ஒன்றைக் கொடுத்துள்ளார். 

பள்ளி வேன் வருவதைப் பார்த்ததும், அவசர அவசரமாக ரேப்பருடன் இருந்த சாக்லேட்டை அப்பயே வாயில் போட்டு விழுங்கியுள்ளார். 

பின்னர், சிறிது நேரத்திலேயே சிறுமி மூச்சுத் திணறல் ஏற்பட்டு, பேருந்தின் படிக்கட்டிலேயே மயங்கி விழுந்தாள். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் சிறுமியை மீட்க முயன்று, உடனடியாக அவளை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

ஆனால், சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். பின்னர் சிறுமியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேதப் பரிசோதனையின் அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT