இந்தியா

தொடரும் அமளி: நாடாளுமன்ற அவைகள் பிற்பகல் 2 வரை ஒத்திவைப்பு

DIN

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகின்றது. விலை உயர்வு, ஜி.எஸ்.டி. வரி, பணவீக்கம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், முதல் இரண்டு நாள் கூட்டம் முடங்கியது.

இந்நிலையில், இன்று காலை அவைகள் கூடியவுடன் விலை உயர்வு குறித்து விவாதிக்க மீண்டும் எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, அத்தியாவசியப் பொருள்களை கையில் ஏந்தியபடி முழக்கமிட்டனர்.

இதையடுத்து மாநிலங்களவையை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

அதேபோல், மக்களவையிலும் பதாகைகளை ஏந்தி அவைத் தலைவரின் இருக்கை முன்பு நின்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். தொடர்ந்து, மக்களவையும் பிற்பகல் 2 மனிவரை ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT