காங்கிரஸ் போராட்டம், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், கன்வர் யாத்திரை உள்ளிட்ட காரணங்களால் வியாழக்கிழமை காலை மத்திய தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறையில் ஆஜராவதைக் கண்டித்து, அமலாக்க இயக்குனரக அலுவலகத்தை நோக்கி தலைவர்கள் பேரணியாகச் சென்று, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தைக் கருத்தில் கொண்டு மத்திய தில்லியில் உள்ள முக்கிய பகுதிகளை தில்லி போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதையும் வாசிக்கலாம் | உ.பி. சாலை விபத்தில் சிக்கிய பெண் பிரசவித்த சில நிமிடங்களில் உயிரிழப்பு
மத்திய தில்லியின் மற்ற நகரங்கள் மற்றும் நொய்டா, காஜியாபாத், குருகிராம் மற்றும் பரிதாபாத் ஆகிய நகரங்களுடன் இணைக்கும் பல முக்கிய பகுதிகளில் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய தில்லியை நோக்கிச் செல்லும் பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிர்த்து வருகின்றனர்.
பல்வேறு வழித்தடங்களில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்து பயணிகளுக்கு டிவிட்டர் மூலம் போலீசார் பதிவிட்டு வருகின்றனர். மேலும் அதற்கேற்ப பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.