இந்தியா

நாட்டில் புதிதாக மேலும் 21,880 பேருக்கு தொற்று: 60 பேர் பலி

நாட்டில் வியாழக்கிழமை கரோனா பாதிப்பு 21,566 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 21,880 ஆக அதிகரித்துள்ளது. 60 பேர் உயிரிழந்துள்ளனர். 

DIN

நாட்டில் வியாழக்கிழமை கரோனா பாதிப்பு 21,566 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மேலும் புதிதாக 21,880 ஆக அதிகரித்துள்ளது. 60 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 21,566 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேலும் புதிதாக 21,880 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,38,47,065-ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,49,482 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.34 சதவீதமாக உள்ளது. 

தொற்று பாதித்தவர்களில் புதிதாக 60 பேர் இறந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,25,930 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.20 சதவீதமாக உள்ளது.

கரோனாவில் இருந்து 21,219 போ் குணமடைந்துள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,31,71,653-ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.46 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 2,01,30,97,819 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. வியாழக்கிழமை மட்டும் 37,06,997 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT