முகப்பு
இந்தியா

தில்லியில் மேலும் 16 பேருக்கு டெங்கு: மொத்த பாதிப்பு 159

தலைநகர் தில்லியில் ஜூலை மாதத்தில் 16 பேருக்கு டெங்கு நோய்ப் பாதிப்பு பதிவாகியுள்ளன. இதையடுத்து இந்தாண்டு மொத்த பாதிப்பு 159 ஆக உயர்ந்துள்ளது என்று தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

Updated On : 25 ஜூலை, 2022 at 4:06 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:23 PM

தலைநகர் தில்லியில் ஜூலை மாதத்தில் 16 பேருக்கு டெங்கு நோய்ப் பாதிப்பு பதிவாகியுள்ளன. இதையடுத்து இந்தாண்டு மொத்த பாதிப்பு 159 ஆக உயர்ந்துள்ளது என்று தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

மாநகராட்சி இதுதொடா்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

இந்தாண்டு தில்லியில் இதுவரை டெங்குவால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. முன்னதாக ஜூன் மாதத்தில் 32 பேருக்கு தொற்று பதிவாகியது. 

Advertisement

ஜனவரி 1 முதல் ஜூன் 25 வரை தில்லியில் 134 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளதாக தரவு கூறுகிறது

ஜூன் 2020, 2019, 2018 மற்றும் 2017 இல், நகரத்தில் 20, 26, 33 மற்றும் 60 பேருக்கு பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு 9,613 டெங்கு பாதிப்புகள் தேசிய தலைநகரில் பதிவாகியுள்ளன.

தில்லியில் 2016ல் 4,431 பேருக்கும், 2017ல் 4,726 பேருக்கும் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் இந்த எண்ணிக்கை 2018இல் 2,798 ஆகவும், 2019இல் 2,036 ஆகவும் குறைந்துள்ளது.

2017 மற்றும் 2016 ஆம் ஆண்டில், நகரில் மொத்தம் 10 பேர் இறந்துள்ளனர். அடுத்தடுத்த ஆண்டுகளில், 2018, 2019 மற்றும் 2020 இல் முறையே நான்கு, இரண்டு மற்றும் ஒரு இறப்பு பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இந்த வருடத்தில் இதுவரை 33 மலேரியா மற்றும் 8 சிக்குன்குனியா வழக்குகள் பதிவாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.