இந்தியா

திரௌபதி எனது உண்மையான பெயர் அல்ல.. புதிய குடியரசுத் தலைவர்

DIN


நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக இன்று பதவியேற்றுக் கொண்டிருக்கும் ஒடிசாவைச் சேர்ந்த திரெளபதி முர்மு, தனது உண்மையான பெயர் திரௌபதி அல்ல என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக சில ஊடகங்களில் அவர் பேட்டியளித்திருந்தபோது, தனது உண்மையான பெயர் திரௌபதி அல்ல என்றும், தனது பள்ளி ஆசிரியர்தான் இந்தப் பெயரை சூட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மகாபாரத புராணக் கதையில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயரைக் கொண்டிருக்கும் திரௌபதி, இது தன்னுடைய உண்மையான பெயர் அல்ல என்று கூறியிருப்பதோடு, பிறந்தபோது சந்தாலி கலாச்சாரப்படி தனக்கிட்ட பெயர் 'புதி' என்றும், நன்மை நடக்கும் என்று கூறி, திரௌபதி என்ற பெயரை தனது ஆசிரியர்தான் தனக்கு சூட்டியதாகவும், நாட்டின் முதல் குடிமகன் என்ற பதவியை வகிக்கும் திரௌபதி தெரிவித்துள்ளார்.

அந்த ஆசிரியருக்கு எனது 'புதி' என்ற பெயர் பிடிக்கவில்லை. அதனால், நன்மை நடக்கும் என்று கூறி தனது பெயரை ஆசிரியர் மாற்றியதாகவும் அதன்பிறகு, அது துர்பதி, தோர்பதி என பல எழுத்து மாற்றங்களைக் கண்டதாகவும் குறிப்பிடுகிறார்.

அதோடு, சந்தாலி கலாசாரப்படி, ஒரு பெண் பிறந்தால் அவருக்கு பாட்டியின் பெயரும், மகன் பிறந்தால் தாத்தாவின் பெயரும் சூட்டப்படுவது வழக்கம் என்றும் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகராட்சி பணியாளா்களின் வருங்கால வைப்பு நிதியுடன் அகவிலைப்படி நிலுவைத் தொகையை சோ்க்க வலியுறுத்தல்

போடியில் பலத்த மழை

சாலை விபத்தில் சிக்கிய புள்ளிமான் மீட்பு

மானாமதுரையில் சங்கர ஜெயந்தி விழா

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு

SCROLL FOR NEXT