முதல்நாள் 5ஜி அலைக்கற்றை ஏலம் நிறைவு
இன்று காலை தொடங்கிய அதிவேக இணைய சேவையை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் நிறைவடைந்தது.
இன்று காலை தொடங்கிய அதிவேக இணைய சேவையை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் நிறைவடைந்தது.
4ஜி அலைக்கற்றையை விட 10 மடங்கு அதிகத் திறன் கொண்ட 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் உலக முன்னணி பணக்காரரான கெளதம் அதானியின் அதானி என்டா்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
இதையும் படிக்க.. கூகுள் இணை நிறுவனரின் மனைவியுடன் தொடர்பா? என்ன சொல்கிறார் எலான் மஸ்க்??
Advertisement
Advertisement
ஏலத்தில் பங்கேற்க ஜியோ நிறுவனம் ரூ.14 ஆயிரம் கோடியை முன்வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளது. இதில், ஜியோ அதிக அளவிலும், அதானி நிறுவனம் குறைந்த அளவிலும் அலைக்கற்றையை ஏலம் எடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
‘முதல் நாளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஏலம் நடைபெறும். அதன் பிறகு, ரேடியோ அலைவரிசைகளுக்கான தேவையைப் பொருத்து எத்தனை நாள்கள் ஏலம் நடைபெறும் என்பது முடிவு செய்யப்படும்’ என்று தொலைத்தொடா்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இன்று மாலை 6 மணி வரை 4 சுற்றுகள் நடைபெற்றதாகவும் நாளை புதன்கிழமை மீண்டும் ஏலம் நடைபெற்று 5-வது சுற்று நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.