இந்தியா

ஒரே ஊசியில் 30 மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி: இது என்ன அநியாயம்?

மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் ஒரே ஊசியில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. . 

IANS

மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் ஒரே ஊசியில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜூலை 27-ல் ஜெயின் பப்ளிக் பள்ளியில் மாணவர்களுக்கான தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு, செவிலியர் மாணவி ஒருவர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார். 

தடுப்பூசி போடும்போது, செவிலியர் ஊசி மாற்றாததை ஒரு மாணவரின் தந்தை பார்த்துள்ளார். இதைப் பற்றி விசாரித்தபோது, தன்னிடம் ஒரே ஒரு சிரஞ்ச் மட்டுமே இருப்பதாக கூறி செவிலியர் தன்னை தற்காத்துக் கொண்டார். 

முகாமில் தடுப்பூசி போடப்பட்ட அனைத்து மாணவர்களின் பெற்றோர்கள் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தனர். 

அலட்சியம் மற்றும் ஒரு ஊசி - ஒரு சிரிஞ்ச் - ஒரே முறை என்ற நெறிமுறையை மீறிய குற்றத்திற்காக செவிலியர் மீது எப்ஐஆர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இதுகுறித்து, தடுப்பூசி குழுவை அனுப்பும் பொறுப்பில் இருந்த மாவட்ட நோய்த்தடுப்பு அலுவலர் டாக்டர் ராகேஷ் ரோஷனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மாநில அரசின் சுகாதாரத் துறைக்கு தெரிவித்துள்ளதாகவும், முகாமில் தடுப்பூசி போடப்பட்ட அனைத்து மாணவர்களின் மாதிரிகளையும் சேமிக்கத் தொடங்கியுள்ளதாகவும் மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மேலும், விதிமுறைகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.  இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதவே கடவுள்!

கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!

2-வது டி20: ஜோஷ் ஹேசில்வுட் அபார பந்துவீச்சு; 125 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி!

நவ. 3 - 6 வரை வீடு தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம்!

பெண்களுக்கு எதிரான கொலைகார காங்கிரஸ்: பாஜக விமர்சனம்

SCROLL FOR NEXT