மதுபான விற்பனை: தில்லி அரசு புதிய முடிவு 
இந்தியா

மதுபான விற்பனை: தில்லி அரசு புதிய முடிவு

மதுபானங்களை நேரடியாக விற்பனை செய்வது என்று தில்லி அரசு முடிவெடுத்திருப்பதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.

DIN


புது தில்லி: தற்போதைக்கு புதிய கலால் கொள்கையை திரும்பப் பெற்றக் கொண்டு, அரசு நடத்தும் விற்பனையகங்கள் மூலம் மட்டுமே மதுபானங்களை நேரடியாக விற்பனை செய்வது என்று தில்லி அரசு முடிவெடுத்திருப்பதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பினால், புது தில்லியில் தற்போது இயங்கி வரும் 468 தனியார் மதுபானக் கடைகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மூடப்படும். அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமம் மற்றும் புதிய கலால் கொள்கை ஜூலை 31ஆம் தேதியுடன் நிறைவடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவை குற்றம்சாட்டும் வகையில் பேசியிருக்கும் மணீஷ் சிசோடியா, குஜராத்தில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் மதுபான விற்பனையில் ஈடுபடுவது போல புது தில்லியிலும் மேற்கொள்ள திட்டமிடுவதாகக் கூறியுள்ளார்.

மேலும், மதுபானங்கள் இனி அரசு மதுபானக் கடைகள் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படும். இதில் வேறு எந்த குழப்பமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT