இந்தியா

மத்திய அரசைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

DIN

விலைவாசி உயர்வை கண்டித்து ஆகஸ்ட் 5ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதாக இதுவரை 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விலைவாசி உயர்வு, வேலையின்மை, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 

மேலும் ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரதமர் இல்லம் முற்றுகையிடப்படும் எனவும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ ரயில் அதிகாரியை தாக்கிய பாடகர் வேல்முருகன் கைது!

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி

ஹிஜாப்பை அகற்றச் சொல்லி அடையாள அட்டையை சரிபார்த்த பாஜக வேட்பாளர்!

இடஒதுக்கீடு தொடர்பான போராட்டத்திற்கு விரைவில் தேதி அறிவிக்கப்படும்: ராமதாஸ்

4-ம் கட்ட தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT