இந்தியா

'தண்ணீரே இல்லாத குளத்தில் நீச்சல் எனக் குற்றச்சாட்டு': மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்

DIN

பணப் பரிமாற்றமே இல்லாமல் பணச்செலவை செய்தார்கள் என குற்றச்சாட்டு சுமத்துவதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

சீனர்களுக்கு விசா வழங்கியதில் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாக சிபிஐ அவர் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது. அரசியல் பழிவாங்கலுக்காக மத்திய அரசால் சிபிஐ பயன்படுத்தப்படுவதாக காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது சுட்டுரைப் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். 

அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில், “பணப் பரிமாற்றமே இல்லை, ஆனால் பணச் செலவை செய்தார்கள் என்று குற்றச்சாட்டு. தண்ணீரே இல்லாத குளத்தில் நீ அத்துமீறி நுழைந்து நீச்சல் செய்தாய் என்று சொன்னால் எப்படியிருக்கும்? பாக்கெட்டும் இல்லை, பர்ஸும் இல்லை, ஆனால் நீ பிக்பாக்கெட் அடித்தாய் என்று சொன்னால் எப்படியிருக்கும்? எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிகை 10ஆக உயர்வு

ராகுலுக்கும், மோடிக்கும்தான் நேரடிப் போட்டி: அமித் ஷா

பனிச்சாரல்! ஸ்ரீமுகி..

டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் அசத்துவார்: குமார் சங்ககாரா

SCROLL FOR NEXT