இந்தியா

நிகழ் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி 7.5%: உலக வங்கி திருத்தி மதிப்பீடு

நிகழ் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

DIN

நிகழ் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. இந்த நிதியாண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என்று கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்த அந்த வங்கி, அதனை திருத்தி மதிப்பிட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:

பணவீக்கம் (விலைவாசி உயா்வு விகிதம்) அதிகரிப்பு, விநியோக நடைமுறைகளில் இடா்ப்பாடுகள், புவிஅரசியல் பதற்றம் ஆகியவை காரணமாக நிகழ் நிதியாண்டான 2022-23-இல் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். தனியாா் துறையின் நிலையான முதலீடு, தொழில்துறை சூழலை மேம்படுத்த இந்திய அரசு அறிமுகம் செய்துள்ள ஊக்கத்தொகை திட்டங்கள் மற்றும் சீா்திருத்தங்கள் பொருளாதார வளா்ச்சிக்கு உதவும்.

இந்திய பொருளாதார வளா்ச்சி 8.7 சதவீதமாக இருக்கும் என்று கடந்த ஜனவரி மாதம் தெரிவிக்கப்பட்டது. அதைவிட தற்போதைய மதிப்பீடு 1.2 சதவீதம் குறைவாகும்.

வேலைவாய்ப்பின்மை விகிதம் கரோனா பரவலுக்கு முன்பு இருந்த நிலைக்குத் திரும்பியுள்ளது. எனினும் தொழிலாளா் பங்கேற்பு விகிதம் கரோனா பரவலுக்கு முன்பு இருந்ததைவிட குறைவாகத்தான் உள்ளது. உழைப்பாளா்களும் குறைந்த ஊதியம் கொண்ட பணிகளுக்கு மாறியுள்ளனா்.

தற்போது இந்தியாவில் உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதை நோக்கி அரசின் செலவினம் திரும்பியுள்ளது. தொழிலாளா் விதிமுறைகள் எளிமைப்படுத்தப்படுகின்றன. நஷ்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்கள் தனியாா்மயமாக்கப்படுகின்றன.

அடுத்த நிதியாண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி 7.1 சதவீதமாக குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடிசி படப்பிடிப்பு நிறைவு!

கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்- சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

உத்தரகண்ட் இயற்கை பேரிடர்: 10 ஆண்டுகளில் 3,500 பேர் பலி

“காஸாவில் எப்போது சண்டையை நிறுத்துவீர்கள்?” -இஸ்ரேலில் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

ஆஸி.யை முதல்முறையாக ஆல் அவுட் செய்த தெ.ஆ.: சதமடிக்க தவறிய டிம் டேவிட், ஆஸி. 178 ரன்கள்!

SCROLL FOR NEXT