முகப்பு
இந்தியா

பாஜக செய்யும் பாவத்துக்கு தண்டனை மக்களுக்கா? மம்தா ஆவேசம்

ஹௌரா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைக்கு சில அரசியல் கட்சிகளே காரணம் என்றும், வன்முறைக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:47 PM
பாஜக செய்யும் பாவத்துக்கு தண்டனை மக்களுக்கா? மம்தா ஆவேசம்
பகிர்:


கொல்கத்தா: ஹௌரா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைக்கு சில அரசியல் கட்சிகளே காரணம் என்றும், வன்முறைக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில், இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடத்தப்பட்டன.

மேற்கு வங்க மாநிலம் ஹௌராவில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இது தொடர்பாக பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, பாவம் செய்வது பாஜக. ஆனால், அதற்கான தண்டனையை மக்கள் அனுபவிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த இரண்டு நாள்களாக ஹௌரா பகுதியில் வன்முறை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறைக்குப் பின்னணியில் சில அரசியல் கட்சிகள் உள்ளன. அவர்கள்தான் வன்முறையை உருவாக்குகிறார்கள். இதனை ஒருபோதும் ஏற்க முடியாது. இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →