மகாராஷ்டிரத்தில் வழக்கத்தை விட 2 நாள்கள் தாமதமாக தொடங்கும் பருவமழை
மகாராஷ்டிரத்தில் தென்மேற்கு பருவமழை, வழக்கத்தை விட 2 நாள்கள் தாமதமாக தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மும்பை: மகாராஷ்டிரத்தில் தென்மேற்கு பருவமழை, வழக்கத்தை விட 2 நாள்கள் தாமதமாக தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாட்டில் பருவமழையானது படிப்படியாகத் தொடங்கு வருகிறது. பருவமழை வழக்கமாக ஜூன் 9-ஆம் தேதி கொங்கனின் தொடங்கும். இந்தாண்டு சற்று தாமதமாகியுள்ளது.
இதையும் படிக்கலாம்: 'என்னைப் பற்றி பேசுவதற்கு பதிலா...'' - சிவாங்கி கொடுத்த பதிலடி
தென்மேற்கு பருவமழை கொங்கன் மற்றும் மத்திய மகாராஷ்டிரத்தின் சில பகுதிகளில் பெய்யத் தொடங்கியுள்ளது. மேலும், கனமழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
Advertisement
அடுத்த 48 மணி நேரத்திற்கு மகாராஷ்டிரத்தில் பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலைகள் உள்ளன என்று அவர் கூறினார்.
கடந்த மே 29ஆம் தேதி கேரளத்தை பருவமழை தொடங்கியுள்ளது. மே 31ஆம் தேதி முதல் ஜூன் 7 வரையிலான காலகட்டத்தில் தென் மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதி, கேரளம், கர்நாடகத்தின் ஒரு சில பகுதிகள், தமிழகத்திலும் பருவமழை பரவத் தொடங்கியது.