காஷ்மீர்: இந்த ஆண்டில் இதுவரை 100 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் இன்று செவ்வாய்கிழமை காலை இரு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். இத்துடன் நடப்பாண்டில் காஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் இன்று செவ்வாய்கிழமை காலை இரு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். இத்துடன் நடப்பாண்டில் காஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.
காஷ்மீா் பள்ளத்தாக்கில் பண்டிட் சமூகத்தினா், வெளிமாநிலத்திலிருந்து வந்து பணிபுரிவோரைக் குறிவைத்து பயங்கரவாதிகள் கொலை செய்வது அதிகரித்து வருகிறது. இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளைப் பாதுகாப்புப் படையினா் மேற்கொண்டு வருகின்றனா்.
அந்த வகையில் பூஞ்ச், சோபியன் உள்ளிட்ட மாவட்டங்களில் தேடுதல் பணியின் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து இதுவரை 101 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றதாகத் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 99-ஆக இருந்த எண்ணிக்கை, இன்று காலை ஸ்ரீநகரில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 2 பேரை சுட்டுக்கொன்றதால் 101 ஆக அதிகரித்துள்ளது.
பலியானவர்களிடமிருந்து அதிகமான ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், வெடிபொருள்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.