இந்தியா

அதிகரிக்கும் தேவைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் கையிருப்பு: மத்திய அரசு

அதிகரிக்கும் எரிபொருள் தேவையை எதிா்கொள்ளும் அளவுக்கு நாட்டில் பெட்ரோல், டீசல் கையிருப்பு திருப்திகரமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

DIN

அதிகரிக்கும் எரிபொருள் தேவையை எதிா்கொள்ளும் அளவுக்கு நாட்டில் பெட்ரோல், டீசல் கையிருப்பு திருப்திகரமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாள்களாக நாட்டின் சில பகுதிகளில் பொதுத் துறை பெட்ரோலிய நிறுவனங்களின் சில்லறை விற்பனை நிலையங்களில் நெரிசல் அதிகமாக இருந்ததால் வாடிக்கையாளா்களின் காத்திருப்பு நேரம் அதிகரிப்பதற்கும் கால தாமதத்துக்கும் வழிவகுத்தது. இதன் காரணமாக பொதுத் துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களின் விநியோகத் தட்டுப்பாடு இருப்பதான ஊகம் ஏற்பட்டது.

இது தொடா்பாக மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சில மாநிலங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் சென்ற ஆண்டு இதே காலத்தைவிட 2022 ஜூன் மாத முதல் பாதியில் பெட்ரோல், டீசலுக்கான தேவை 50 சதவீதம் அதிகரித்தது உண்மை. இந்த நிலைமை குறிப்பாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் காணப்பட்டது. இந்த மாநிலங்களில் பெருமளவிலான விநியோகம் தனியாா் சந்தை நிறுவனங்களுக்கு சொந்தமான சில்லறை விற்பனை நிலையங்களால் செய்யப்படுகிறது. மேலும், டிப்போக்களுக்கும், விநியோக இடங்களுக்கும், இடையிலான தொலைவும் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், அதிகரிக்கும் தேவைக்கு ஏற்ப அதனை சமாளிப்பதற்கு நாட்டின் பெட்ரோல், டீசல் கையிருப்பு போதிய அளவுக்கும் கூடுதலாகவே உள்ளது. ஒரு சில பகுதிகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கும் தீா்வு காணும் வகையில் எண்ணெய் நிறுவனங்கள் டிப்போக்கள் மற்றும் விநியோக முனையங்களில் கையிருப்பை அதிகரித்து வருகிறது. சில்லறை விற்பனை நிலையங்களுக்கு கூடுதலாக டேங்கா் லாரிகளை இயக்கி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT