முகப்பு
இந்தியா

காஷ்மீரில் தொடரும் என்கவுன்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி கொல்லப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 ஜூன், 2022 at 5:17 PM
கோப்புப்படம்
பகிர்:

காஷ்மீரில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி கொல்லப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின்  குல்கம் மாவட்டத்தில் உள்ள மிஷிபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலியான பயங்கரவாதியின் அடையாளம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. கடந்த செவ்வாய்கிழமை முதல் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் என்கவுன்ட்டரில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

மேலும், புல்வாமா மாவட்டத்திலுள்ள அர்முல்லா கிராமத்தில் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகளை கைது செய்ததோடு அவர்களிடமிருந்து 15 கிலோ ஐஈடி வகை வெடிகுண்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.