கோப்புப்படம் 
இந்தியா

ம.பி: கார் கிணற்றில் விழுந்து 7 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தில் கார் கிணற்றில் விழுந்த விபத்தில் 7 பேர் பலியாகினர்.

DIN

போபால்: மத்தியப் பிரதேசத்தில் கார் கிணற்றில் விழுந்த விபத்தில் 7 பேர் பலியாகினர்.

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் வறண்ட கிணற்றில் கார் கவிழ்ந்து விழுந்ததில், ஒரு குழந்தை உள்பட 7 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரில் இருந்தவர்கள் புதன்கிழமை மாலை திருமண விழாவிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தனர். எதிரே வந்த இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நபரைக் காப்பாற்ற முற்பட்ட வேளையில், காரனது கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த வறண்ட கிணற்றில் விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர்  மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர முயற்சிக்கு பிறகு கிணற்றில் இருந்து 7 உடல்கள் மீட்கப்பட்டது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

காா் விபத்து: ஐயப்பப் பக்தா் உயிரிழப்பு

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

புத்தொளி... ஸ்ரீலீலா!

சாலை பணியாளா்கள் நூதன ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT