கோப்புப்படம் 
இந்தியா

வேளாண் சட்டங்களை போல அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: ராகுல் காந்தி

வேளாண் சட்டங்களை போல  அக்னிபத் திட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

DIN

புது தில்லி: வேளாண் சட்டங்களை போல  அக்னிபத் திட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதிய ராணுவ ஆள்சேர்ப்புத் திட்டமான 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக  ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.  இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பதாவது:  "தொடர்ந்து 8 ஆண்டுகளாக 'ஜெய் ஜவான், ஜெய் கிசான்' வீரர்களை மத்திய அரசாங்கம் அவமதித்து வருகிறது.  வேளாண் சட்டங்களை பிரதமர் திரும்பப் பெற வேண்டும் என்று நான் முன்பே கூறியிருந்தேன்.

எனவே, அதேபோல் இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று அக்னிபத் திட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும்" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT