கோப்புப்படம் 
இந்தியா

'அக்னிபத்'துக்கு எதிராக தில்லியில் நாளை போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

மத்திய அரசு அறிவித்துள்ள ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நாளை தில்லி ஜந்தர் மந்தரில் சத்தியாகிரக போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. 

DIN

மத்திய அரசு அறிவித்துள்ள ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நாளை தில்லி ஜந்தர் மந்தரில் சத்தியாகிரக போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. 

4 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் ஆள்சேர்க்கும் ‘அக்னிபத்’ என்ற திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்  கடந்த செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி இல்லாத இத்திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. 

பிகார், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் போராட்டம் வலுத்து வருகிறது. 

இந்நிலையில், ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நாளை தில்லி ஜந்தர் மந்தரில் சத்தியாகிரக போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. 

அமைதியான முறையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் அனைத்து காங்கிரஸ் எம்.பி.க்களும், காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT