இந்தியா

அமர்நாத் யாத்திரை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் 

DIN

அமர்நாத் யாத்திரை தொடங்க உள்ள நிலையில், ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் சனிக்கிழமை சரிபார்த்தனர். 

ஜம்மு பிரதேச ஆணையர் ரமேஷ் குமார் மற்றும் கூடுதல் காவல்துறை இயக்குநர் முகேஷ் சிங் ஆகியோர் தலைமையில் இன்று காலை 20 பாதுகாப்பு வாகனங்கள் ஜம்முவிலிருந்து காஷ்மீரின் நுழைவாயிலான பனிஹால் வரை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. 

யாத்திரைக்காக ஜம்மு, உதம்பூர் மற்றும் ராம்பன் மாவட்டங்களில் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் ஜம்மு பிரிவின் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் சரிபார்த்துள்ளனர். 

43 நாள்கள் நீடிக்கும் அமர்நாத் யாத்திரை, தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள நுன்வான் மற்றும் பால்டால் ஆகிய இரட்டை வழிகளில் ஜூன் 30 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

யாத்ரீகர்களின் முதல் குழு பகவதி நகர் அடிப்படை முகாமில் இருந்து ஒரு நாள் முன்னதாக யாத்திரைக்குப் புறப்பட்டு ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக பஹல்காம் மற்றும் பால்டலில் உள்ள அந்தந்த அடிப்படை முகாம்களை அடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT