அக்னிபத்: தார்வாரில் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி
அக்னிபத் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு எதிராக கர்நாடகத்தில் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அக்னிபத் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு எதிராக கர்நாடகத்தின் தார்வார் மாவட்டத்தில் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலா பவனில் ஒன்றுகூடி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து மாவட்ட கூடுதல் துணை ஆணையர் மனு ஒன்றைப் பெற்றார்.
போராட்டக்காரர்களின் ஒரு பகுதியினர் பேருந்து மீது கற்களை வீசினர். மேலும் அவர்கள் துணை ஆணையர் அலுவலகத்தை நோக்கி போராட்டம் நடத்த அனுமதிக்கப்படவில்லை. போராட்டக்காரர்கள் அனைவரையும் கலைக்க காவல்துறையினர் தடியடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் கலைந்து செல்லப்பட்டுள்ளதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நான்காவது நாளாக சனிக்கிழமையும் நாடு முழுவதும் பல மாநிலங்களில் போராட்டம் வெடித்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.