குலாம் நபி ஆசாத் 
இந்தியா

குலாம் நபி ஆசாத்துக்கு கரோனா பாதிப்பு

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

DIN

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் டிவிட்டர் பதிவில், 

நான் கரோனா சோதனை செய்ததில், தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து என்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன். 

சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தங்களைப் பரிசோதனை செய்துகொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார். 

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் தொற்றுநோய்களின் எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ளது. நாட்டில் செவ்வாய்க்கிழமை புதிதாக 9,923 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், மேலும் 17 பேர் கரோனாவுக்கு இறந்துள்ளனர். 

இந்தியாவில் இதுவரை 196.32 கோடி தடுப்பூசி அளவுகள் செலுத்தப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்தல் ஆணைய செயல்பாடு இப்படியே தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து! - சுதர்சன் ரெட்டி

தி வைல்ட் ஐரிஸ்... ஆன் ஷீத்தல்!

15 வருஷத்துக்கு முன்னாடி ஒரே ஒருத்தர்தான் OTT பத்தி பேசுனாரு! - Lokesh Kanagaraj

பிராமணர்களா, பெரும் பணக்காரர்களா? யாரைச் சொன்னார் நவரோ?

அங்கயற்கண்ணி...வாமிகா கேபி

SCROLL FOR NEXT