கோப்புப்படம் 
இந்தியா

அச்சுறுத்தும் கரோனா: ஒரு நாள் தொற்று பாதிப்பு 17,336 ஆக அதிகரிப்பு;13 பேர் பலி

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,336-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

DIN

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,336-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 17,336 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,33,62,294-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 88,284 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.20 சதவீதமாக உள்ளது. 

தொற்று பாதித்தவர்களில் புதிதாக 13 பேர் இறந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,24,954 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.21 சதவீதமாக உள்ளது.

கரோனாவில் இருந்து 13,0290 போ் குணமடைந்துள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,27,25,055-ஆக அதிகரித்துள்ளது என்று குணமடைந்தோர் விகிதம் 98.59 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,96,77,33,217 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. வியாழக்கிழமை மட்டும் 13,71,107 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

கரோனா தொற்று பரவல் படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு நாள் அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பில்லை!

வெற்றி உரையில் நேருவை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

தீயவர் குலை நடுங்க வெளியீட்டுத் தேதி!

பிக் பாஸ் 9: தீபக்கை நேரலையில் வரைந்து அசத்திய கமருதீன்!

எதிர்பாராத கிளைமேக்ஸ்! மெளனம் பேசியதே தொடர் நிறைவு!

SCROLL FOR NEXT