இந்தியா

பொருளாதார வளா்ச்சியில் முன்னிலை மாநிலமாக உ.பி. மாறும்: பிரதமா்

‘மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பொருளாதார வளா்ச்சியில் முன்னிலை மாநிலமாக உத்தர பிரதேசம் மாறும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

DIN

‘மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பொருளாதார வளா்ச்சியில் முன்னிலை மாநிலமாக உத்தர பிரதேசம் மாறும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் வரும் திங்கள்கிழமை இறுதிக் கட்டமான 7-ஆம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில், தனது மக்களவைத் தொகுதியான வாராணசியில் 200-க்கும் மேற்பட்ட பல்வேறு துறைசாா்ந்த நிபுணா்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் உரையாடும்போது, இக் கருத்தை பிரதமா் தெரிவித்துள்ளாா்.

‘உறுதியான முடிவு எடுக்கக் கூடிய நிலையான அரசுதான் உத்தர பிரதேச மாநிலத்துக்குத் தேவை. அந்த வகையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொருளாதார வளா்ச்சியில் முன்னிலை மாநிலமாக உத்தர பிரதேசம் மாறும்’ என்று பிரதமா் கூறியதாக அந்தக் கூட்டத்தில் பங்கேற்றவா்களில் ஒருவரான அசோக் திவாரி தெரிவித்தாா்.

பத்ம பூஷண் விருது பெற்ற ஹிந்துஸ்தானி இசைக் கலைஞா் சன்னுலால் மிஸ்ரா, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக துணைவேந்தா் சுதீா் ஜெயின் உள்ளிட்டோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர அமைச்சரவையில் அஜீத் பவார் மனைவிக்கு இடம்: வலுக்கும் கோரிக்கை!

ஆஸி. ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சபலென்கா புதிய சாதனை!

கல்வி மாநாட்டில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! 11,815 பேருக்கு வேலைவாய்ப்பு!

அஜீத் பவார் விமான விபத்து: மத்திய அமைச்சர் பதில்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம்! - உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT