மகளிர் இல்லாமல் மருத்துவத் துறை முழுமையடையாது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் மத்திய சுகாதாரத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிர் தினக் கொண்டாட்டத்தில் அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்துகொண்டார்.
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட பெண்களுக்கு விருது வழங்கி கெளரவித்தார்.
பின்னர் பேசிய அவர், பெண்கள் இல்லாமல் மருத்துவத் துறை முழுமையடையாது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் வாய்ப்புகளைப் பெறவேண்டும்.
கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் அங்கீகரிக்கப்பட்ட சமூக நல ஆர்வலர்களின் (ஆஷா) பங்கு முக்கியமானது. அவர்களது பணியை மறந்துவிட இயலாது என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.