முகப்பு
இந்தியா

ராஜஸ்தான் சிறையில் 290 கைதிகளுக்கு மனநலம் பாதிப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில், பல்வேறு சிறைகளில் உள்ள சுமார் 290 கைதிகளுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சிறைத்துறை அமைச்சர் டிகரம் ஜூலி தெரிவித்தார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

ராஜஸ்தான் மாநிலத்தில், பல்வேறு சிறைகளில் உள்ள சுமார் 290 கைதிகளுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சிறைத்துறை அமைச்சர் டிகரம் ஜூலி தெரிவித்தார். 

மேலும், அவர் கூறியதாவது, 

மாநிலத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளில் பலர் மனநலம் பாதிக்கப்படுகின்றனர். 

அவையில் கேள்வி நேரத்தின்போது பாஜக எம்எல்ஏ பிரதாப் சிங் கேட்டதற்கு, மொத்தம் 443 கைதிகள் பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக 290 கைதிகள் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார். 

ஜனவரி 31, 2022 நிலவரப்படி, மாநிலத்தின் ஆறு மத்திய, 19 மாவட்ட மற்றும் 31 துணைச் சிறைகளில் உள்ள கைதிகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.