இந்தியா

கோவாவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி: 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தலாம்

DIN

12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு செலுத்த கோவாவேக்ஸ் தடுப்பூசிக்கு அவசரகால அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இளைஞர்கள் மற்றும் சிறார்களுக்கு செலுத்தும் வகையில் அவசரகால பயன்பாட்டிற்காக மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு கோவாவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது.

உலக அளவில் நோவாவேக்ஸ் தடுப்பூசி 90 சதவிகிதம் செயல்திறன் கொண்டதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கோவாவேக்ஸ் தடுப்பூசியை முன்னெச்சரிக்கைத் தவணை தடுப்பூசியாகப் பயன்படுத்த மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்த மத்திய அரசின் மருத்துவ் நிபுணர் குழு கடந்த 7ஆம் தேதி பரிந்துரை செய்தது. 

அமெரிக்காவைச் சேர்ந்த நோவாவேக்ஸ் நிறுவனத்திடம் இருந்து தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் கோவாவேக்ஸ் தடுப்பூசியை புணேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT