முகப்பு
இந்தியா

பாகிஸ்தானில் மேலும் 758 பேருக்கு கரோனா: 6 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 758 பேர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 758 பேர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அந்நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்ததாவது, 

இன்றைய பாதிப்பைத் தொடர்ந்து நாட்டில் மொத்த பாதிப்பு 1,51,6,150 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 17,995 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். அதில் 722 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

ஒரேநாளில் 6 பேர் பலியானதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 30,287 ஆக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 36,569 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாட்டில் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,46,7,868 ஆக உயர்ந்துள்ளது. 

இதற்கிடையில், பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் இதுவரை மொத்தம் 5,70,688 நோய்த்தொற்றுகளுடன் மிகவும் பாதிக்கப்பட்ட பிராந்தியமாகத் தொடர்கிறது, அதைத் தொடர்ந்து பஞ்சாப் மாகாணத்தில் இதுவரை 5,03,128 வழக்குகள் பதிவாகியுள்ளன. 

முழு கட்டுரையைப் படிக்க →