முகப்பு
இந்தியா

பஞ்சாப்: எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை

பஞ்சாப்பில் சா்வதேச எல்லையைத் தாண்டி ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியா் சுட்டுக் கொல்லப்பட்டாா். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

பஞ்சாப்பில் சா்வதேச எல்லையைத் தாண்டி ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியா் சுட்டுக் கொல்லப்பட்டாா். 

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் மாவட்டத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லையைக் கடக்க முயன்ற பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் ‘அமிருதசரஸ் சா்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் சந்தேகத்துக்குரிய நபரின் நடமாட்டம் தெரிய வந்தது. அந்த நபரை எச்சரித்தும் எல்லையை தாண்டி முன்னேறி வருவதை நிறுத்தவில்லை. இதையடுத்து, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக படை வீரா்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினா். அதில் அவர் கொல்லப்பட்டாா். அந்தப் பகுதியில் சோதனை தொடா்ந்து நடைபெற்று வருகிறது’ எனத் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →