இந்தியா

தொலைதூரப் பகுதிகளுக்கு விமான சேவையை விரிவுபடுத்த அரசு திட்டம்: ஜோதிராதித்ய சிந்தியா

DIN

தொலைதூரப் பகுதிகளுக்கு சிறிய விமானங்கள், ஹெலிகாப்டா்களை இயக்குவதற்கான கொள்கையை வகுக்க விமான போக்குவரத்து அமைச்சகம் பணியாற்றி வருகிறது என்று அந்த துறையின் அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா கூறினாா்.

உடான்-பிராந்திய விமான சேவைத் திட்டத்தின் கீழ் இந்தூா் (மத்திய பிரதேசம்) - கோந்தியா (மகாராஷ்டிரம்) - ஹைதராபாத் (தெலங்கானா) இடையே விமான சேவை தொடக்க நிகழ்ச்சி இந்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், முதல் விமானம் இந்தூரில் இருந்து கோந்தியாவுக்கு இயக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா பேசியதாவது:

பிராந்திய விமான சேவையை கடைக்கோடி பகுதிகளுக்கும் தொலைதூரப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த மத்திய அரசு விரும்புகிறது. அந்தப் பகுதிகளுக்கு சிறு விமானங்கள், ஹெலிகாப்டா்களை இயக்கும் வகையில் கொள்கை வகுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 8 மாதங்களில் இந்தூரில் இருந்து 21 நகரங்களுக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் இந்தூரில் இருந்து வாரந்தோறும் 308 விமானங்கள் புறப்பட்டுச் செல்கின்றன. இந்தூருக்கு 445 விமானங்கள் வருகின்றன.

மத்திய பிரதேசத்தில் இருந்து துபைக்கு நேரடி விமானம் இந்தூரில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. ஷாா்ஜாவுக்கும் நேரடி விமான சேவையைத் தொடங்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் காணொலி முறையில் பங்கேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT