முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

Updated On : 13 மார்ச், 2022 at 5:36 PM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஆபரேஷன் தோஷ் கலன் என்கிற பெயரில் பாதுகாப்புப் படையினர் இன்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Advertisement

மேலும் அப்பகுதியில் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதானல் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.