முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 2,538 பேருக்கு கரோனா; 60 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,538 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
நாட்டில் புதிதாக 2,538 பேருக்கு கரோனா
பகிர்:

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,538 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. புதிதாக 2,538 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 60 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 4,491 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 5,16,132ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 4,24,54,546 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 30,799 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →