முகப்பு
இந்தியா

உ.பி: நாளை பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம்: அனைவரும் தவறாமல் பங்கேற்க உத்தரவு

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வராக யோகி ஆதித்யநாத் வரும் 25-ஆம் தேதி பதவியேற்கவுள்ள நிலையில், நாளை லக்னௌவில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:44 AM
யோகி ஆதித்யநாத்
பகிர்:

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வராக யோகி ஆதித்யநாத் வரும் 25-ஆம் தேதி பதவியேற்கவுள்ள நிலையில், நாளை திங்கள்கிழமை(மார்ச் 21) லக்னௌவில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. 

அண்மையில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. 

இதையடுத்து தலைநகா் லக்னௌவில் உள்ள வாஜ்பாய் இகானா விளையாட்டரங்கில், மாா்ச் 25-ஆம் தேதி மாலை 4 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. அதில், முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்கவுள்ளாா்.

இந்நிலையில், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை திங்கள்கிழமை(மார்ச் 21) காலை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், பாஜக சட்டப் பேரவைக் கட்சித் தலைவராக யோகி ஆதித்யநாத் தோ்ந்தெடுக்கப்படவுள்ளாா். மேலிடப் பார்வையாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க உள்ளார். 

இதனைத் தொடர்ந்து அமித் ஷாவும், யோகி ஆதித்யநாத்தும் ஆலோசித்து புதிய அமைச்சரவையில் இடம் பெறுவோரின் பட்டியலை இறுதி செய்வார்கள் என கூறப்படுகிறது. 

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில், பாஜக 255 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் 18 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் அந்த மாநிலத்தில் பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →