இரை தேடி வந்து ஊட்டிவிடும் தாய்க் குருவி 
இந்தியா

உலக சிட்டுக்குருவிகள் தினம்: இணையத்தில் வைரலாகும் தாய்க்குருவியின் படம்

உலக குருவிகள் நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் தாய்க்குருவி ஒன்று தனது குஞ்சுக்கு ஊட்டி விடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

DIN

உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் தாய்க்குருவி ஒன்று தனது குஞ்சுக்கு ஊட்டி விடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குருவிகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 20 சிட்டுக்குருவிகள் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலக குருவிகள் நாள் 2010ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. 

நகரமயமாகல் மற்றும் அதிகரிக்கும் தொலைத்தொடர்பு சேவைகளால் சிட்டுக்குருவிகள் பாதிப்புக்குள்ளாகின்றன. இதனால் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது அழிந்து வரும் பறவையினங்கள் பட்டியலிலும் குருவி உள்ளது. 

இதனால் குருவியினங்கள் அழிவதைத் தடுக்க அனைவரும் உறுதியேற்போம் என்பதை வலியுறுத்திம் வகையில், டிவிட்டரில் #WorldSparrowDay டிரெண்டாகி வருகிறது.

இதனிடையே உத்தரப் பிரதேச மாநிலம் மிர்ஸாப்பூரில் வீட்டில் கட்டப்பட்டுள்ள கூட்டில் தாய்க்குருவி தனது குஞ்சுக்கு இரை தேடி வந்து ஊட்டிவிடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்ஜெட் - நிதியமைச்சர் கவனத்துக்கு...

போக்குவரத்து விழிப்புணா்வு பேரணி

உழவினார் கைம்மடங்கின்...

4-வது பொதிகை புத்தகத் திருவிழாவுக்கு சுவா் ஓவியம் வரைந்து அழைப்பு!

சங்கரன்கோவில் விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT