இந்தியா

காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆசானி புயலாக வலுப்பெறும்: வானிலை ஆய்வு மையம்

DIN

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து ஞாயிற்றுக்கிழமை காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறியது. இது, இன்று திங்கள்கிழமை ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை காலை தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் அந்தமான்-நிக்கோபார் தீவு வழியாக நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது.

இது, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலு பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் அந்தமான்-நிக்கோபர் தீவை நோக்கி சுமார் 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்துகொண்டு வருவதால், அந்தமான் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. 

அந்தமான் கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி, மற்றும் மியான்மா் கடலோர பகுதியில் மணிக்கு 65 கி.மீ. முதல் 75 கி.மீ. வேகத்திலும் இடையிடையே மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மாா்ச் 22-ஆம் தேதி வரை மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

SCROLL FOR NEXT