கரோனா தடுப்பூசி கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதைக் கட்டாயமாக்கவில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதைக் கட்டாயமாக்கவில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.
கரோனா தடுப்பூசி தொடர்புடைய வழக்கில் தமிழ்நாடு கூடுதல் அட்வகேட் ஜெனரல் அமித் ஆனந்த், அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையும் படிக்க | உக்ரைன்: பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சு
இதற்கு விளக்கமளிக்கும் வகையில் மத்திய அரசு சார்பாக சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் கூறியதாவது:
"ஒரு சிறிய விளக்கம். 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயப்படுத்தியதாக தமிழ்நாடு அரசு தெரிவிக்கிறது. அது கட்டாயமல்ல. மத்திய அரசு எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், ஆனால் அது கட்டாயமல்ல என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடு" என்றார்.
முன்னதாக, தடுப்பூசி செலுத்தாதவர்களாலேயே கரோனா உருமாற்றம் அடைவதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.