இந்தியா

பயணக் கட்டணம் உயருகிறது: ஆட்டோவுக்கு ரூ. 30, டாக்ஸிக்கு ரூ.210 அதிகம்

DIN


கேரளத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலியாக வாடகை வாகனங்களில் பயணக் கட்டணம் உயரும் என்று கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோனி ராஜு தெரிவித்துள்ளார். 

கேரளத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து ஆட்டோ, டாக்சிகளுக்கான வாடகை கட்டண உயர்வு குறித்து பரிசீலனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ராமச்சந்திரன் தலைமையில் குழு நியமிக்கப்பட்டது.

இந்தக் குழு ஆய்வு மேற்கொண்டு கேரள அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.25-லிருந்து ரூ.30 ஆக உயர்த்தலாம் என்று அறிவித்துள்ளது.

கால் டாக்சிகளுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.175-லிருந்து  ரூ.210ஆக உயர்த்தலாம் என்று தெரிவித்துள்ளது. இரவு நேரங்களில் 50 சதவிகிதம் கூடுதலாக வசூலிக்கலாம் என்றும், 15 நிமிட காத்திருப்புக்கு ரூ.10 கட்டணமாக பெறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

இதன் மூலம் டாக்ஸிக்களில் கிலோமீட்டருக்கு ரூ. 17 முதல் 20 என கட்டணம் நிர்ணயிக்கப்படவுள்ளது. ஆட்டோக்களில் கிலோமீட்டருக்கு ரூ. 12 முதல் 15 ரூபாய் நிர்ணயிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பேசிய கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோனி ராஜு, கட்டண உயர்வு குறித்து ஆலோசனை செய்த பிறகு விரைவில் முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT