தில்லி மாநகராட்சி தேர்தலை பாஜக சரியான நேரத்தில் நடத்தி வெற்றி பெற்றால் ஆம் ஆத்மி அரசியலிலிருந்து விலகும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சவால் விடுத்துள்ளார்.
தில்லியில் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு ஆகிய மூன்று குடிமை அமைப்புகளை ஒருங்கிணைக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை செவ்வாயன்று ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தில்லி சட்டப் பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தில்லியில் மாநகராட்சி தேர்தலைச் சரியாக நடத்தி பாஜக வெற்றி பெற்றால் நாங்கள் அரசியலை விட்டு வெளியேறுவோம். உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி என்று பாஜக கூறுகிறது, ஆனால், சிறிய கட்சி மற்றும் சிறிய தேர்தலால் அது பயந்துவிட்டது. சரியான நேரத்தில் மாநகராட்சி தேர்தல் நடத்த பாஜகவுக்கு நான் தைரியம் தருகிறேன் என்றார்.
பின்னர், அவர் டிவிட்டர் பதிவில்,
தேர்தலை ஒத்திவைத்தது, ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்டி, ஜனநாயகத்தை நிலைநாட்டத் தியாகம் செய்த தியாகிகளை அவமதிக்கும் செயலாகும்.
தோல்வி பயத்தில் இன்று தில்லி மாநகராட்சி தேர்தலை ஒத்திவைக்கிறார்கள். நாளை மாநிலங்கள் மற்றும் நாட்டின் தேர்தலை ஒத்திவைப்பார்கள் என்று கேஜரிவால் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.