இந்தியா

ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான வங்கி மோசடி வழக்குகள் நிலுவை: மத்திய அரசு

DIN

2019 முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரூ.21 ஆயிரம் மதிப்பிலான வங்கி மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வங்கி மோசடிகள் தொடர்பான கேள்விக்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் 2019ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலான தகவலின்படி 128 வங்கி மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்தார்.

மொத்தம்  ரூ.21,074.43 கோடி மதிப்பிலான வங்கி மோசடிகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மேற்கு வங்கத்தில் ரூ.293.64 கோடி மதிப்பிலான 6 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து சத்தீஸ்கரில் 157.26 கோடி மதிப்பிலான 8 வழக்குகளும், ராஜஸ்தானில் ரூ.12.06 மதிப்பிலான 1 வழக்கும், மகாராஷ்டிரத்தில் 20312.35 மதிப்பிலான 101 வழக்குகளும், பஞ்சாபில் 298.94 கோடி மதிப்பிலான 12 வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக தனது எழுத்துப்பூர்வ பதிலில் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT